
ஒலி 96.8ம் முரசு டாட் காமும் இணைந்து வழங்கும் உலகின் முதல் தமிழ் குறுஞ்செய்திச் சேவை.
சிங்கபூர்த் தமிழ் வானொலியான ஒலி 96.8ம் மொழி சார்ந்த தொழில்நுட்பத்தின் முன்னோடியான முரசு டாட் காமும் இணைந்து உலகின் முதல் தமிழ் குறுஞிசெய்திச் சேவையை பெருமையுடன் அறிமுகம் செய்கின்றன. தைப் பொங்கலை முன்னிட்டு அறிமுகம் காணும் இந்தச் சேவை ஒலி நேயர்கள் தமிழிலேயே குறுஞ்செய்தி எழுதி அனுப்புவதைச் சாத்தியமாக்கும்.
முரசு மென்பொருளை உருவாக்கியவரும் தமிழ் குறுஞ்செய்தி தொழில் நுட்பத்தை சாத்தியமாக்கியவருமான திரு முத்து நெடுமாறன் இவ்வாறு கூறினார்: ?1980களிலிருந்து மொழி சார்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது முரசு டாட் காம். தொழில் நுட்பம் எவ்வளவு மாறினாலும் தங்களது தாய் மொழியிலேயே தகவலைப் பரிமாறிக் கொள்ள அனைவருக்கும் உதவுவதே எங்கள் நோக்கம்"
இது வரை picture message எனப்படும் படச் செய்திகளை மட்டுமே தமிழில் அனுப்ப முடிந்தது. னால் இப்போது ங்கிலத்தில் செய்வது போலவே தமிழிலும் குறுஞ்செய்தியை எழுதி அனுப்பலாம். இது உலகின் முதல் முயற்சி.?For More Details:
www.Murasu.com/mobile/
[sooriyan.com]
No comments:
Post a Comment