Tuesday, December 28, 2004

தமிழினத்தை ஒரு உயிரினமாய் கூட எண்ணவில்லையா..??

நான் இணையத்தில் இணைந்த நேரம் எவ்வளவு சோகமான நேரம் என்று எனக்கு தெரியும். வரலாறு காணாத பேரழிவு தமிழ் மக்களுக்கு நடந்திருக்கிறது இந்த அழிவுகளை எப்படியும் நிவர்த்தி செய்ய முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். புதிதாய் கட்டடங்கள் கட்டலாம் பொருட்கள் வாங்கலாம். ஆனால் அனாதைகளாய் நிக்கிற எம் மக்களது சொந்தங்களை திருப்பி கொடுக்க யாரால் முடியும். நம்பவம் நடந்த தினத்தில் இருந்து எல்லா மக்களது வீட்டிலும் வேதனை நிறைந்திருக்கிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியும். பேச்சில் மட்டுமா தமிழர் இலங்கைப்பிரசைகள் இது இப்படியிருக்க. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் உள்ள மக்களுக்கு இதுவரை அரசாங்கத்தால் எந்த வித நீவாரணப்பணிகளுகம் செய்யப்படவில்லை என்று அறிகையில். இவர்கள் எப்பவும் மனிதர்களாய் வாழ மாட்டார்கள் என்ற எண்ணம் ஆணித்தரமாய் ஆகிறது. வரலாற்றிலேயே இப்படி ஒரு செயல் நடந்திருக்குமா..?? எதிரிக்கே உதவி புரிந்த ஒரு போராட்ட இயக்கம் இருந்திருக்க முடியாது. ஆனால் விடுதலைப்புலிகள் இராணுவத்திற்கே உதவி செய்தார்கள் என்று கூறும் போது தமிழன் என்ற சொல்லின் அர்த்தம் புரிந்தேன். ஆனால் சிங்கள அரசு தமிழ் மக்களிற்கு செய்தது என்ன. ஒரு அரசு செய்யவேண்டிய குறைந்த பட்ச நிவாரணஉதவி கூட சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகியும் போகவில்லை என்பது. எத்தனை கவலைக்கிடமானது மட்டும் அல்ல கீழ்த்தரமான விடையம். தமிழர் புனர்வாழ்வு களம் கொண்டு சென்ற பொருட்களை கூட சிங்களப்பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்டார்கள் என்று அறியும் போது. இவர்கள் தமிழர்களை ஒரு உயிரினமாய் கூட நினைக்கவில்லையா என்று தான் எண்ணத்தோன்றுகிறது. தங்கள் குணம் காட்டும் மிருக்கூட்டம் அதைவிட இன்னும் ஒரு மனிதாபிமானம் இல்லாத செயல் நடந்தேறிக்கொண்டிருக்கிறதாம். பாதிக்கப்படாத சிங்கள மக்களையும் கிளிந்த ஆடைகள் போட்டும்.. காயம் பட்டது போன்ற கட்டுக்கள் போட்டும் அங்குள்ள அரச உத்தியோகத்தர்கள் அவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் என்று காட்டி நிவாரண உதவி அவர்களிற்கு வழங்கப்படுகிறதாம். அந்த நிவாரணப்பொருட்களை அவர்கள் விக்கிறார்களாம். இது எப்படிபட்ட ஒரு இரக்கம் இல்லாத சுயநலம் பிடித்த ஒரு சமூகம் உலகத்தில் இருக்கிறது அதுவும் எமக்கு அருகி்ல் இருக்கிறது என்று எண்ணும் போது. அவமானப்படுவது மட்டும் அல்ல ஆத்திரம் கூட வரவைக்கிறது. இழப்பு இந்த விடயம் யாவராலும் எதிர்பார்க்கப்பட்ட விடயம். சிறிலங்கா அரசு இராணுவத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு இழப்பு வந்ததாய் அறிவித்த பின். எல்லாத்தமிழ் மக்களும் ஆதங்கத்துடன் எண்ணியிருப்பது இயக்க உறுப்பினர்களிற்கு என்ன ஆச்சு அவர்களிற்கும் ஏதாவது இழப்போ என்று எண்ணியிருப்பார்கள். இன்று விசாலகன் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை பொறுப்பாளர் TTN ல் கொடுத்த பேட்டியில். விடுதலைப்புலிகளிற்கு பெரிய இழப்பு இல்லை என்று கூறினார். அவர்களது தளபாடங்களிற்கும் பெரிய இழப்புகள் இல்லையாம் காரணம் அவர்களது கடலில் பாவிக்கப்படும் தளபாடங்கள் கடலிலும் தரையிலும் ஓட்டப்படும் உபகரணங்களாம் அவற்றை அவர்கள் முடிந்த வரை பாதுகாப்பாக வைப்பது வழக்கமாம் அதனால் அவர்கள் பெரிதாக இழப்பை எதிர் கொள்ளவில்லை என்று கூறினார். அவர்கள் மக்களது இழப்பு தான் தமது இழப்பு என்று கூறுகிறார்கள். அது மன ஆறுதலை தந்தாலும் மக்களது இந்த இழப்பை எப்படி பூர்த்தி செய்வது என்று தான் அவர்களது முழு கவலையும். தேவைகளை கூறியவர்கள்.. இன்று உயிருடன் இல்லை நேற்று புனர்வாழ்வு களகப்பொறுப்பாளர் றெஜு அவர்களது பேட்டிபார்க்கையில். மிகவும் நெருடலாய் இருந்தது. அவர் ஐரோப்பிய நாடுகளிற்கு பல திட்டங்களை நடைமுறைப்படுத்த நம்பிக்கை ஒளி நிதியத்திற்கு நிதி சேகரிப்பிற்காய் வந்தவர் உயிர்க்காப்பு நிதி சேகரிக்க வேண்டிய தூர்ப்பாக்கிய நிலையில் தள்ளப்பட்டார். அவர் கூறும் போது தன்னிடம் சைக்கிள் வேண்டும்.. வாற வருடனம் புதிய சப்பாத்து வேண்டும்.. வருத்தம் வந்தால் கொண்டு செல்ல புதிய வாகனம் வேணும் என்று எல்லாம் சிறுவர் இல்ல குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கேட்க யாவும் வாங்கிக்கொண்டு தான் வருவேன் என்று உறுதி கொடுத்து விட்டு வந்ததாகவும், ஆனால் அதைக்கேட்ட யாரும் இப்பொழுது உயிருடன் இல்லை என்று கூறினார். எத்தனை கொடுமையிது சின்னக்குழந்தைகள் என்ன செய்தன அகதியாய் அனாதையாய் ஆகி சிறுவர் இல்லங்களிலும் முதியோர் இல்லங்களிலும் வாழ்ந்தவர்களது உயிரைப்பறிப்பதில் என்ன இன்பம் ...?? யுத்தத்தால் சிறுக சிறுக இறந்த மக்களைவிட ஒரு சில மணி நேர இயற்கையின் கொடிய தாண்டவத்தால் இறந்தவர்களின் அளவு எத்தனைபேர். இப்படி எல்லாம் தமிழர்க்கு கொடுமை நடக்க நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்...??

No comments: