Sunday, January 23, 2005

26/01/05 துக்க தினமாக அறிவிப்பு.

LTTE declares January 26 as National Day of Mourning "Liberation Tigers declare 26th January as a National Day of Mourning to remember those who lost their lives in the Tsunami disaster in Tamil Homelands and in other regions of South Asia. Let us all participate in the grief and sorrow of all who have lost their loved ones on this day," said Liberation Tigers of Tamil Eelam in a press release issued from its Kilinochchi political offices Sunday. Translation of the full text of the press release issued in Tamil follows: "Our people suffered untold hardship, destruction and misery during the two decades of war. The ceasefire provided our people, especially to those living in the sea coast, a chance to resume fishing to rebuild their lives. It is under this circumstances the force of the tidal waves hit the Southeast Asian region including Sri Lanka causing unprecedented devastation on the 26 December 2004. Our people living in coastal areas of Tamil homeland have been severely affected. The fury of nature has rendered our people homeless, traumatized them by taking away lives of their loved ones and forced them to seek shelter in welfare centers and in homes of their friends and relatives. Liberation Tigers declare 26th January as a National Day of Mourning to remember those who lost their lives in the Tsunami disaster in Tamil Homelands and in other regions of South Asia. Let us all join in the grief and sorrow of all who have lost their loved ones on that day. Let us light our memorial lamps in our Tamil Homeland and in all Tamil Homes across the countries of the world, and reserve a place in our hearts and remember the lives lost at the moment in time when the force of Tsunami took the lives of our brothers and sisters. [tamilnet.com] விடுதலைப்புலிகளின் அரசியல்துறை விடுத்த அறிக்கை அரசியல்துறை தமிழீழ விடுதலைப்புலிகள். தமிழீழம். 23.01.2004 பத்திரிகை அறிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போரினால் மிகுந்த துன்பங்களையும் அழிவுகளையும் சொல்லொணாத இடர்களையும் சந்தித்த எமது மக்கள் வாழ்க்கையின் அனுகூலங்கள் அனைத்தையும் இழந்தனர். தற்போது நிலவிவரும் போர் நிறுத்த காலத்தில் எமது மக்கள் கடற்கரையோரங்களில் குடியேறி தமது வாழ்வாதாரத்திற்கான கடற்றொழிலை மேற்கொண்டு வாழ்வியல் அனுகூலங்கiளை ஓரளவு உள்வாங்கத் தொடங்கினர். இந்நிலையில் கடந்த 26.12.2004 அன்று சற்றும் எதிர்பாராத விதமாக பொங்கி எழுந்த நிலவதிர்வுப் பேரலைகள் இலங்கைத்தீவு உட்பட தென்னாசியப் பிராந்தியத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இலங்கைத் தீவில் எமது தாயகப் பகுதிகளில் வாழும் எமது மக்கள் அதிகமான அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இந்த இயற்கையின் கோரத் தாண்டவத்தால் இடம்பெயர்ந்த எமது மக்கள் தமது உறவுகளையும் வாழ்விடங்களையும் இழந்து பிரிந்த தமது உறவுகளின் சோகத்துடன் மனது பேதலித்த நிலையில் மீண்டும் நலன்புரிநிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் இருந்து வருகிறார்கள். இப்பேரனர்த்தம் காரணமாக தமிழர் தாயகத்திலும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 26.01.05 நாள் தேசிய துக்கதினமாக தமிழீழ விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்படுகிறது. இந்நாளில் தமது அன்புக்குரியவர்களையும் உறவுகளையும் இழந்து துடிக்கும் எமது உறவுகளின் சோகத்தில் பங்குகொள்வோம். மூர்க்கமாக எழுந்த கடலலைகளில் சிக்கி எமது உறவுகள் உயிர்நீர்த்த அந்தக் கணத்தில் தமிழர் தேசத்திலும் புலம்பெர்ந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவுச்சுடரேற்றி இழந்துபோன உறவுகளை நினைவில் நிறுத்துவோம்

No comments: