Wednesday, February 02, 2005

தழலிடு! (காசி ஆனந்தன்)

காட்டிக் கொடுப்பவன் எங்கே? அந்தக்! கயவனை கொண்டு வா! தூணோடு கட்டு! சாட்டை எடுத்துவா இங்கே! தம்பி சாகும்வரை அடி பின்பு கொளுத்து! அன்னைத் தமிழை மறந்தான்! பாவி அடுத்தவன் கால்களை நக்கிக் கிடந்தான்! என்ன கொடுமை இழைத்தான்! தீயன் எட்டப்பனார் வேலை செய்து பிழைத்தான்! மாற்றார்க் கழைப்பு விடுத்தான்! வீட்டில் மதுவும் கொடுத்தான்! மகளும் கொடுத்தான்! சோற்றுப் பதவிகள் ஏற்றான்! மானம் தூள் தூளாய் ஆக்கி நெருப்பிலே போட்டான்! பல்லாயிரம் நாட் பயிரை வீரம் பாயும் தமிழ்க் குல மாந்தர் உயிரை எல்லாம் நிறைந்த தமிழை தழலில் இட்டவன் உடல்மேல் இடடா தழலை! தீயன் உடல்தீயத் தீவை! எங்கள் தெய்வத் தமிழ்வாழ இவன் சாவு தேவை! பாயும் புலியே! தமிழா! தம்பி! பச்சைத் துரோகி விழப்பாய்ந்து வாடா! காசி ஆனந்தன்

3 comments:

அரவிந்தன் said...

உங்களிடம் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடல் வரிகள் முழுமையாக உள்ளாதா..?இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கமுடியுமா..?

நன்றி

அரவிந்தன் said...

உங்களிடம் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் தமிழா நீ பேசுவது தமிழா என்ற பாடல் வரிகள் முழுமையாக உள்ளாதா..?இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கமுடியுமா..?

நன்றி

கயல்விழி said...

அந்தப்பாடல் வரிகளாக இல்லை என்னிடம் பாடலாக இருக்கிறது. வேணும் என்றால் அனுப்பிவிடுகிறேன்.

http://thatstamil.indiainfo.com/specials/art-culture/poems/kaasi.html

இங்க இருக்கிறது.. தாமதமான பதிலுக்கு வருந்துகிறோம்.