Monday, February 07, 2005

அரசியற் பொறுப்பாளர் கௌசல்யன் மீது துப்பாக்கிச் சூடுää

மட்டு. அரசியற் பொறுப்பாளர் கௌசல்யன் மீது துப்பாக்கிச் சூடுää அவருடன் மேலும் நால்வர் வீரமரணம் ஜ மட்டக்களப்பு நிருபர் ஸ ஜ திங்கட்கிழமைää 07 பெப்ரவரி 2005ää 22:52 ஈழம் ஸ பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாமல்கம பிள்ளையாரடி என்ற இடத்தில் இன்று இரவு இடம் பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டஅரசியல் துறை பொறுப்பாளர் இ.கௌசல்யன் உட்பட 4 போராளிகளும் வாகன சாரதியொருவரும் உயிரிழந்துள்ளார்கள். வன்னியிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகத்தின் வாகனத்தில் மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சமயம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம் அவரது மெய்க்காப்பாளர்களான 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் போராளியொருவரும் காயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயக்தின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் நாமல்கம என்னும் கிராமத்திலுள்ள பிள்ளையார்கோவிலுக்கு காணிக்கை செலுத்தி விட்டு வாகனத்தில் ஏறிய சமயம் இனந் தெரியாத நபர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது வரை எத்தகைய கருத்துக்களும் வெளியாகவில்லை. [puthinam]

5 comments:

இளங்கோ-டிசே said...

வருத்தமான செய்தி.

Thangamani said...

intha sunaami sampavaththuku piRaku ivvalavu siikkiraththileeyee arasu iththanai veekamaaka seyalpadum enRu naan ninaikkavillai.
varuththamaana seithi!

கயல்விழி said...

அரசியல் என்றால் மனிதாபிமானம் என்பது கிடையாது என்று சரியாய் தான் சொல்லியிருக்கிறார்கள். இத்தனை துயரிடையும் இப்படி ஒரு பழிவாங்கும் படலம். மிகவும் வேதனையாக இருக்கிறது.

-/பெயரிலி. said...

it's a shock. However I am interested to see how the rest of the world react to it. It does not matter if LTTE is good or bad; when it holds it arms back, this killing should be condemned. I just want to see how the people who would react whatever LTTE does as bad, would react to this.

இளங்கோ-டிசே said...

"I just want to see how the people who would react whatever LTTE does as bad, would react to this."

Same here Peyarili. When I read this news at the first place, I thought of this. Letz open our ears to hear what they're gonna say.