Tuesday, February 08, 2005

புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு

தாக்குதல் சம்பவத்துக்கு அரச புலனாய்வைப்பிரிவு மீது விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரும் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளருமான கௌசல்யன் உட்பட நால்வர் படுகொலைச் சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவை குற்றம் சாட்டியுள்ளனர். இப்படுகொலைச் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கௌசல்யன் உட்பட புலிகளின் ஐந்து போராளிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாகக புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். ஆயுதக்குழுக்களும் சிறீலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து விடுதலைப்புலிகளை இலக்குவைத்து செயற்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் சம்பவம் சமாதான முயற்சிகளை பாரதூரமாகப் பாதிக்கவுள்ளதுடன் இதுவரை காலமும் கட்டியெழுப்பப்பட்டு வந்த சமாதான முயற்சிகளுக்கும் பரஸ்பர நம்பிக்கைக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக்குழுப் பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்ää யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் இது என்றும்;ää இப்படியான சம்பவங்கள் மேலும் பரவலடையாமல் தடுப்பதற்கு சிறீலங்கா அரசும் புலிகளும் உறுதிபூண வேண்டும் என்றும் கூறினார். தாக்குதல் சம்பவம் பற்றி பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து கூறுகையில்ää இந்தத் தாக்குதல் முன்னரே செம்மையாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இதேவேளை இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கக்கூடும் அல்லது பாரிய பதில்த் தாக்குதல் ஏதேனும் மேற்கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் சிறீலங்கா அரசுää தலைநகர் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. [puthinam]

No comments: