Sunday, March 27, 2005

சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்!

ஜெனீவா ஐநா கூட்டத்தொடர்: சிறீலங்கா மீது அனைத்துலக உரிமை அமைப்புக்கள் கண்டனம்! ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழவின் 61வது கூட்டத்தொடர் தற்போது ஜெனீவாவில் அமைந்துள்ள ஐநா பணிமனையில் இடம்பெற்றுவருகின்றது. அனைத்துலக மனிதஉரிமைகள் சட்டங்கள்ää நெறிமுறைகள் என்பனவற்றின் அடிப்படையில் இடம்பெறும் இக் கூட்டத்தொடரின் ஆரம்பநாட்களில் சுமார் 90 நாடுகளின் உயர்மட்ட அரச அமைச்சர்கள் மற்றும் வெளிவிவகாரத்துறை செயலாளர்நாயகங்கள் உரையாற்றினார்கள். சிறீலங்கா வெளிவிவகாரஅமைச்சர் கதிர்காமர் மூன்றாவதுநாள் தனது நாட்டின் மனித உரிமைகள் பற்றிய உரையை வழங்கினார். அவ்வுரையில் தமது நாட்டில் சுனாமி நிவாரணங்கள் திறம்பட நடப்பதாகவும், சிவில் உரிமைகள் திறம்படப் பாதுகாக்கப்படுவதாகவும், அவசரகாலநிலை நீங்கிவிட்டதாகவும் கூறினார்.இக்கூட்டத் தொடர்களில் பிரதானமாக சீனா, அமெரிக்கா, கியூபா, நேபாளம், ஈரான், இந்தியா, பாக்கிஸ்தான் என்பன அரச மட்டங்களில் தமக்குள் மோதிக்கொள்கின்றன. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்துலக அரசசார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் செச்சினியா, காஸ்மீர், ஆச்சே மற்றும் தமிழீழ விடயங்கள் பற்றிய கவனஈர்ப்புக்களை கோரி உரையாற்றினார்கள். அத்துடன் பெண்கள், சிறுவர்கள் மீதான உரிமைமறுப்பு விடயங்கள், பொருண்மிய கலாச்சார சமூக உரிமை மறுப்பு விடயங்கள், அரசியல் சிவில் உரிமை மறுப்புக்கள் என்பன போன்ற தலைப்புக்களில் விவாதங்கள், அறிக்கைகள் என்பன தொடர்ந்து வருகின்றன.இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஐநாவை மறுசீரமைப்பது தொடர்பான செயலாளர் நாயகத்தின் புதிய கடுமையான பிரேரணைகள் மத்தியில் இடம்பெறுகின்றமையால் விறுவிறுப்பானதாகவே அமைகின்றது. அவரது புதிய திட்டத்தில் தற்போது இடம்பெறும் வடிவிலான கூட்டத்தொடர் மாற்றப்பட்டு பொதுச்சபை வடிவில் மனிதஉரிமைகள் விடயங்கள் ஆராயப்படும். இதன் மூலம் கியூபா, ஈரான், சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கு மனித உரிமைகள் விவாதங்களின் போது செல்லுபடியற்றதாகிவிடும். ஏனெனில் தற்போதுள்ள ஆணைக்குழு வடிவில் அமெரிக்கா அரசியல் நோக்கில் முன்வைக்கும் மனிதஉரிமைகள் கரிசனைகள் விரிவான கடுமையான விமர்சனங்களுக்குட்படுகின்றது, எதிர்வரும் 7ம் திகதி செயலாளர் நாயகம் கொபி அனான் இங்கு உரையாற்றுவதாக தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளமையால் இந்த மறுசீரமைப்பு விவகாரம் கடுமையாக சு10டுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வடக்குகிழக்கு மனித உரிமைகள் ஆணைக்குழவின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் உயர்மட்டக்குழு உறுப்பினர் மாகாசிவம் ஆகியோர் அரசசார்பற்ற அனைத்துலக அமைப்புக்களின் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அத்துடன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பின் 6 பிரதிகளும்ää தமிழர் மனித உரிமைகள் மையத்தின் இரு உறுப்பினர்களும் கலந்துகொள்கின்றனர்.இவ்வாணைக்குழவின் முன் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, மனித உரிமைகள் மையம் என்பன சார்பில் இருவேறு மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு, ஆணைக்குழு நிகழ்வுகளின் 9வது அட்டவணையின் கீழ் சமர்ப்பித்துள்ள மனுவில் இன்றைய வடக்குக்கிழக்கு நிலவரம் தொடர்பான விடயங்களை தொகுத்து சமர்ப்பித்துள்ளது. இதுவரை நோர்வே மத்தியத்துவத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை முயற்சிகளின் தோல்வகளை சுட்டிக்காட்டி, தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பிரயோகித்துப் பிரிந்து செல்லும் தகைமைப் பெற்றுள்ளனர் என்கின்ற அனைத்துலக பிரகடனத்தின் அடிப்படையில் இம்மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய கதிர்காமர் சுனாமி நிவாரணங்கள் தொடர்பாக வெளியிட்ட பிழையான கருத்துக்களை மறுத்து பதிலளிக்கும் குறிப்பொன்றையும் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வெளியிட்டு பிரதிநிதிகளின் சுற்றுக்கு அனுப்பியது. அதேவேளையில் அவசரகால நிலவரம் தொடர்பாக கதிர்காமர் தெரிவித்த பொய்களை அம்பலப்படுத்தி nஐனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கும் வடக்குக்கிழக்கு மனிதஉரிமைகள் பணிமனையின் உபதலைவர் சட்டத்தரணி சிவபாலன் வெளியிட்ட கருத்துக்கள் பத்திரிகை செய்திக்குறிப்புக்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு முன் உரையாற்றிய இத்தாலியை தலைமையகமாகக் கொண்ட அனைத்துலக உரிமைகள் மற்றும் விடுதலைக்கான அமைப்பின் செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைக்கும் காலகட்டத்தை நோக்கி தள்ளப்படுகின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டி உரையாற்றினார். சனநாயக சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பில் கலந்து கொண்ட டியற்றி மக்னோல்ட் இன்றைய சிறீலங்கா நிலவரம் தொடர்பான நிலவர உரையை ஆற்றினார். இங்கு உரையாற்றிய அனைத்து இனப்புறக்கணிப்புக்கும்ää இனவாதத்திற்கும் எதிரான யப்பானிய அமைப்பின் சிறப்புப்பிரதிநிதிää சுனாமி நிவாரணங்களில் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணிப்புகளுக்கு உட்பட்டது தொடர்பான கண்டனத்தை வெளியிட்டார். தெற்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்களிற்கான புதிய வீடுகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டு விட்டன ஆனால் வடக்கிலும்ää கிழக்கிலும் தொடர்ந்தும் மக்கள் கூடாரங்களில் நம்பிக்கையற்று வாழ்வதாக அவர் நிலைமை விபரித்தார். இதேவேளையில் ஐநாவின் காணமற்போனவர்களுக்கான சிறப்பு பணிக்குழு ஆணைக்குழவிற்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையில் இலங்கையில் சிறீலங்காப் படைகளால் பிடிக்கப்பட்டு காணமல் போன 12227 பேரின் நிலவரம் தொடர்பான தமது விசாரணைகள் தொடர்வதாக அறிவித்துள்ளது. அத்துடன் தம்மால் 1991ää 1992ää 1999 ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட அரசமைப்பு திருத்தங்கள்ää பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல் போன்ற விடயங்களில் சிறீலங்கா செயற்பட வேண்டும் எனவும் கோரியுள்ளது. அத்துடன் காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவிநிதிகளில் பாகுபாடு காட்டடப்படக் கூடாது எனவும் கோரியுள்ளது. இவ்வாண்டு சனவரிவரை ஐநாவின் சிறப்புப் பணிக்குழவின் தகவல்களின் பிரகாரம்ää 12227 காணமல் போனவர்களின் விபரங்களை ஐநா சிறீலங்கா அரசிடம் கோரியிருந்தது. அவற்றில் அரசு 5338 நபர்களின் விபரங்களை ஐநாவிற்கு சமர்ப்பித்திருந்தது. இதில் 5254 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்ää 24 பேர் படையினரின் கைகளில் உள்ளனர். 99பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதிவிபரங்களை அரசு ஐநாவிற்கு இன்னமும் வழங்கவில்லை. இவற்றில் செம்மணியில் கொல்லப்பட்ட தமிழர்களும் அடங்குவர். இன்றும் உலகில் காணமல் போனவர்களின் நிலுவை கூடுதாலகக் கொண்ட முன்னணி நாடாக சிறீலங்காவேயுள்ளது. தொடர்ந்தும் கூட்டத்தொடர் ஏப்பிரல் இரண்டாம் வாரம்வரை இடம்பெறுகின்றது. தகவல் [www.sooriyan.com]

No comments: