Thursday, January 06, 2005

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்பு பணி

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்பு பணி நடவடிக்கைகள் ஒரு தனிநாட்டிற்கான நிர்வாக கட்டமைப்பின் எடுத்துக்காட்டு: வோசிங்டன் ரைம்ஸ் பாராட்டு!! ஆழிப்பேரலை தாக்கிய சில நிமிட நேரத்திலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதை வியந்தும்ää பாராட்டியும் ஆதர் மக்ஸ் எனும் ஏ.பி. ஊடக நிறுவன செய்தியாளர் கிளிநொச்;சியில் இருந்து வோசிங்டன் ரைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் கட்டுரை எழுதியுள்ளார். இக்கட்டுரையில் அவர் மேலும் குறிப்பிடுகையில் போராளிகளின் ஒருபகுதியினர் வீதித் தடைகளை ஏற்படுத்தி காயப்பட்டவர்களை உடனுக்குடன் வைத்தியசாலைகளுக்கு விரைவாக அனுப்புவதற்கான வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கää இன்னொரு பகுதியினர் காயம்பட்டவர்களுக்கு தேவையான இரத்ததானம் பெறுவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். வேறொரு பகுதியினர்ää இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக உடனுக்குடன் புகைப்படம் எடுத்ததுடன்ää அவர்களை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டனர். இவ் அனர்த்தங்களின் முதல்நாள் அன்றே அகதி முகாம்கள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு பொறுப்பாக பல குழுக்களையும் விடுதலைப் புலிகள் உருவாக்கியிருந்தனர். விடுதலைப் புலிகளினது மீட்புப் பணி நடவடிக்கைகள்ää அவர்களது கட்டுக்கோப்பான நிர்வாகத் திறமையை எடுத்துக் காட்டியது மட்டுமல்லாமல்ää இவ்வாறான சிரமமிக்க ஒரு பணியினை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கையாண்ட முறைகள் அவர்களது தனிநாட்டு கோரிக்கைக்கு முன்னோடியாக ஓர் நிர்வாக கட்டமைப்பு இருப்பதனை உலகிற்கு நிருபித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமன்றிää ஆழிப்பேரலை ஓயும் முன்னரேää கடற்புலிகளின் படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதை ஆச்;சரியத்துடன் குறிப்பிட்ட அவர்ää அதேவேளை சிறிலங்கா அரசின் பரிதாப நிலையையும் மிகவும் துல்லியமாக விவரிக்கத் தவறவில்லை. மீட்புப் பணிகள் ஆரம்பிக்க முன்னரேää இப் பணிகளை யார் முன்னின்று செயற்படுத்துவது என்பதில் சிறிலங்கா அரசியல்வாதிகளுக்கு இடையில் முரன்பாடுகள் ஏற்பட்டது மட்டுமன்றிää மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே ஊழல் குற்றச்;சாட்டுகளும்ää நிவாரணப் பொருட்களுடன் வந்த வாகனங்கள் கடத்தப்பட்ட சம்பவங்களும் செய்திகளாக வெளிவரத் தொடங்கியிருந்தன. இதேபோன்றுää இலங்கையில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையும் விடுதலைப் புலிகளினதும்ää தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினதும் நிர்வாகத் திறமையினை பாராட்டியும் சிறிலங்கா அரசின் நிவாரணப்பணிகள் மிகவும் கட்டுக்கோப்பற்ற முறையில் கையாளப்பட்டும் வருவதாக கண்டனம் தெரிவித்தும் கடந்த 5ம் திகதி தனது ஆசரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. [புதினம்.கொம்]

No comments: