Saturday, December 24, 2005

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொலை!! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் துப்பாக்கியால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு சென் மேரீஸ் தேவாலயத்தில் நத்தார் பண்டிகைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஜோசப் பரராஜசிங்கத்தின் துணைவியார் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருப்பதாகவும் அச்செய்தி கூறுகிறது. நன்றி: புதினம்

19 comments:

Anonymous said...

INDIAN THUROOKAGA KULLEGALUUMM AND INDIAN RAW VUMMM BEHIND THIS KILLINGS

பிருந்தன் said...

திட்டமிட்ட சிங்கள அடிவருடிகளின் செயல். சிங்களத்துக்கு எமது பாஷை புரியாது, அதற்கு புரிந்த ஒருபாஷை அடிதான்.
தமிழீழத்தின் கண்ணீர்துடைக்க அருப்பாடுபட்ட அந்த நல்ல உள்ளத்துக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Anonymous said...

பாசம் நிறைந்தவனே
பாராளுமன்றம் போய்
பகைவர்முன் பேசி விட்டு.
உன் தூக்கம் கலைத்து
துணிந்து தமிழனுக்கய்
நெஞ்சுயர்த்தி போராடி
அன்னைத்தமிழ் குடி காத்த
அஞ்சாத்தமிழன் நீயன்றோ???

நீ விதையான சேதி
கேட்டு.
விடியலைத்தொலத்தவர் போல்
விம்மி விம்மி அழுகின்றோம்.

கத்தர் அவதரித்த
நாளினிலே
காடயரின் காடைத்தனம்
புத்தரை வணங்கும்
சிங்கள காடயர்க்கு
கத்தி நாம் போடு சத்தம்
கேட்டிடுமோ???
கட்டையில போவாங்கள்
மனிதம் புரியாத
பிணம் தின்னிகள்.

இன்னும் எத்தனை நாள்
காத்திருப்போம்??
விரைவில் விடியட்டும் ஈழம்.
அன்றே தமிழ்க் குடி நின்மதியாய் வாழும்.[/b]

Anonymous said...

அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

thamillvaanan said...

1934 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார். இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

மட்டக்களப்பு அரச செயலகத்தில் வரைபட பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் தினபதி என்ற தமிழ் நாளிதழின் பகுதிநேர ஊடகவியலாளராக பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். சுகுணம் ஜோசப் என்ற பெயரில் தொடர்ந்து ஆக்கங்களை அவர் எழுதி வந்தார்.



ஜோசப் பரராஜசிங்கமும் அவரது துணைவியார் சுகுணமும்

1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.

2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசியப் பட்டியலினூடாக அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்ற சில தமிழ் அரசியல்வாதிகளுள் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.

பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.

தகவல் புதினம்

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

thamillvaanan said...

1934 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள் ஜோசப் பரராஜசிங்கம் பிறந்தார். இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

மட்டக்களப்பு அரச செயலகத்தில் வரைபட பணியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் தினபதி என்ற தமிழ் நாளிதழின் பகுதிநேர ஊடகவியலாளராக பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். சுகுணம் ஜோசப் என்ற பெயரில் தொடர்ந்து ஆக்கங்களை அவர் எழுதி வந்தார்.



ஜோசப் பரராஜசிங்கமும் அவரது துணைவியார் சுகுணமும்

1990 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக முதன் முதலில் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் மிக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளராக மீண்டும் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் அதிக வாக்குகள் பெற்று தெரிவானார் ஜோசப் பரராஜசிங்கம்.

2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசியப் பட்டியலினூடாக அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்ற சில தமிழ் அரசியல்வாதிகளுள் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.

பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் சார்க் நாடுகளின் நாடாளுமன்றக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் ஜோசப் பரராஜசிங்கம்.

தகவல் புதினம்

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Anonymous said...

ஐயா!!

தமிழ்த்தேசியம், பிராந்திய வல்லரசு கேவலமாக இரண்டாவது சதியை வலைவிரித்தவுடன் அசையாது நின்று குரல் கொடுத்தாய்! கொண்ட கொள்கையில் மலையாக நின்றாய்! இன்று உனை பறிகொடுத்து தவிக்கிறோம்! மானத்தமிழ்த்தாய் பெற்றெடுத்த மாமனிதனே உனக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!
_________________
"வலிமையே வாழ்வு"

இளங்கோ-டிசே said...

மிகவும் கவலைதரும் விடயம். பிறக்கப்போகின்ற வருடம் மிகவும் இருளாயும் குழப்பமாயும் ஈழத்தில் தெரிகின்றது :-(.

Anonymous said...

//மிகவும் கவலைதரும் விடயம். பிறக்கப்போகின்ற வருடம் மிகவும் இருளாயும் குழப்பமாயும் ஈழத்தில் தெரிகின்றது//
நல்லதையே சிந்திப்போம். நல்லவை நடக்கும்

Anonymous said...

This reply to SADHAYAM.
AS FAR AS EELAM TAMIL'S POLITICAL
RIGHTS CONCERNED, ONLY THE STUMBLING BLOCK IS INDIA. INDIA's RAW IS BEHIND EVERY POLICAL KILLINGS WHO ARE LTTE SUPPORTERS
AND SYMPATHIZER.IT IS A NAKED TRUTH

வசந்தன்(Vasanthan) said...

//INDIA's RAW IS BEHIND EVERY POLICAL KILLINGS WHO ARE LTTE SUPPORTERS
AND SYMPATHIZER.IT IS A NAKED TRUTH
//

கறிவாசன்,
என் சிற்றறிவுக்குப் பட்டவரை உங்களுக்குச் சொல்ல ஏதுமில்லை.

Anonymous said...

அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

Yes vasanthn you are right. How he forgot this naked truth?( proxy war conducted by SL govt).



I beleive these type of comments are coming from SL intellignets.

They want to link every such incident with RAW/LTTE.

Anonymous said...

அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

ENNAR said...

கருணா கோஷ்டி விடுதலைப்புலிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் தனியாக பிரிந்து சென்ற கருணா கோஷ்டிதான் இந்த தாக்குதலை நடத்தியிருப் பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டணி, பிரபாகரன் தலைமையில் ஆன விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதை கருணா கோஷ்டி எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி இவ்வாறு சொல்கிறதே தவறான செய்தியா.
தமிழனை தமிழன் தான் கொன்றானா?

Anonymous said...

கருணா கோஷ்டியின் பெயரை வைத்து சிங்கள் அரசின் உளவுத்துறையினர், பல தமிழீழ ஆதரவாளரை கொண்றொழித்துள்ளது, செய்வது இவர்கள், பழியை அவர்கள்மீது போடுவார்கள், ஏற்கவோ மறுக்கவோ முடியாத அவல நிலையில் அவர்கள், ஏனெனில் அவர்களே அவர்கள் கட்டுப்பாட்டில், எதிர்த்தால் அவர்கள் இருப்பும் நாளை கேள்விக்குறியே. இதைமட்டும் மறுத்து அவர்கள் நல்லவர்கள் ஆக அவர்கள் நல்லவர்கள் இல்லையே, இது அவர்களுக்கும் தெரியும். எல்லாவற்றுக்கும்மேல் அவர்களின் இருப்பு அவர்களுக்கு முக்கியம்.

மறைந்த மாமனிதருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Anonymous said...

joke of the day
Tigers assassinated Tamil MP, claims Sri Lankan govt







Colombo, Dec 25 (PTI) Tamil Tiger rebels gunned down minority Tamil legislator Joseph Pararajasingham in eastern Sri Lanka in a bid to divert attention from the violence-hit north, the Defence Ministry claimed today.
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) deployed its pistol group to kill the Tamil legislator while he attended a Christmas service at a Roman Catholic church in Batticaloa, it said in a two-page statement.

"Hundreds of Christians were attending the midnight service at this reputed church when the LTTE pistol men, mingled together with devotees inside, (and) carried out this inhuman assassination, regardless of the religious importance of the occasion," it said.

"The LTTE, closely judged by the series of criminal acts being perpetrated in the northeast in recent few days, it appears that they were desperately trying to divert the attenton elsewhere and create mayhem and havoc while eschewing political discussions," the statement said.

It said three police guards had been deployed to protect the 71-year-old politician at the time of the shooting and an investigation was underway.

The ministry said that the politician had not planned to visit the church, but a caller just before midnight appeared to have insisted on his presence.

It said the LTTE had been wanting to kill minority Tamil politicians and shift the blame to government forces. PTI
http://www.ptinews.com/pti%5Cptisite.nsf/0/D4C2A999D4AFC38A652570E200333D52?OpenDocument

in this analogy, One has to conclude GOSL assasinated Kadirgamar

கயல்விழி said...

பரிசில்கெட்ட அரசியல் பாவம் உயிர்கள். அண்ணாருக்கு எனது அஞ்சலிகள்.

கயல்விழி said...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்

தமிழ்த் தேசப்பற்றாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்த் தேசப் பற்றாளரும் மனித உரிமை விழுமியங்களை மதித்து மனித உரிமை மேம்பாட்டுக்காக உழைத்தவருமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் மட்டக்களப்பு நகரின் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சென் மேரிஸ் தேவாலயத்தில் 24 டிசம்பர் 2005 நள்ளிரவு அன்று நத்தார் பண்டிகை ஆராதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரும் அவர்களது கருணா குழு, ஈ.பி.டி.பி உள்ளிட்ட ஒட்டுக்குழுவினராலும் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவரது மனைவி திருமதி சுகுணம் உட்பட ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் காயமடைந்திருக்கின்றனர்.

வருகைக்கால ஆராதனையில் கலந்து தனது மக்களின் சமாதானத்திற்காகவும் விடுதலைக்காகவும் மன்றாட்டுச் செய்துவிட்டுப் பேராயரிடமிருந்து நற்கருணைப் பிரசாதம் பெற்றுத் திரும்புகையில் தேவாலயத்திற்குள் புகுந்திருந்த சிறிலங்காப் படைப் புலனாய்வாளர்களும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து இந்தத் தேசப்பற்றாளரைத் துப்பாக்கிச் சூட்டில் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தமிழ் மக்களின் மனித உரிமைகளுக்காகச் சர்வதேச அரங்கிலும், இராஜதந்திர அரங்கிலும் குரல் எழுப்பி, மனித உரிமை அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணி வடக்கு - கிழக்கு மனித உரிமைச் செலகத்தின் உருவாக்கத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்ட இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரை சிறிலங்கா படைப் புலனாய்வுத்துறையினர் மண்ணில் வீழ்த்தியுள்ளனர்.

ஜாதிக ஹெல உறுமய போன்ற தெற்கின் இனவாத சக்திகளின் கரம் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறை வரை நீண்டு செயற்படுவதை திட்டமிட்ட இக்கொலை நிரூபித்து நிற்கின்றது. மக்கள் தொண்டனாக தமிழ்த் தேச விடுதலைக்காகவும் மனித உரிமை மேம்பாட்டிற்காகவும் அயராது உழைத்த இவரை இந்த இனவாத சக்திகள் மரணிக்கச் செய்திருக்கின்றன.

இந்த ஈவிரக்கமற்ற கொடூரக் கொலையினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அன்னாருடைய மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thanks to puthinam.

Anonymous said...

கறிவாசன்,
என் சிற்றறிவுக்குப் பட்டவரை உங்களுக்குச் சொல்ல ஏதுமில்லை.

DAI THADEE VASANTHAN IPPAVUMM INDIA EELA THAMILARUKKUU NALLATHUU SAITHUU ENNRUU NAAIMPUMM MUTTALIL NEEYUM ORUVANN